Sunday, December 21, 2008

மாம்பலம்

திருமணமானவுடன் ஏற்படும் மிகப்பெரிய, தவிர்க்க இயலாத ஒரு தர்மசங்கடம், துணிமணி வாங்கக் கடைகளுக்குச் செல்வது தான்!! போத்தீசில் சுடிதார் குவியல்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு பேந்த பேந்த முழித்து, சரவணா ஸ்டோர்ஸ் உள்ளே பொட்டு, டப்ஸ் வாங்கி பில் போட அரைமணி நேரம் நின்று, சென்னை சில்க்ஸில் வாங்கிய புடைவைகளை அவர்களுடைய கட்டைப்பையில் எடுத்துக்கொண்டு, பாண்டி பஜாரிலிருந்து துவங்கி மாம்பலம் பஸ் ஸ்டாண்டு வரை நடந்து... அநுபவித்தால் தான் தெரியும்!!!